Monday, 30 November 2015
Friday, 18 September 2015
Friday, 21 August 2015
Sunday, 2 August 2015
Saturday, 25 July 2015
ஊழியர்கள் முதலாளின் சொத்து - சினிமா எக்ஸ்பிரஸ் - 31 ஜுலை 2015
ஊழியர்கள்
முதலாளின் சொத்து - சினிமா எக்ஸ்பிரஸ் - 31 ஜுலை 2015
“உத்தம வில்லன்”
படத்தில் கமல்ஹாசன் தன் மனைவியை ஹஸ்பிடலில்
விட்டுவிட்டு வீடு திரும்போது, தன் ஓட்டுநரை பற்றி சொல்லும் போது, “திருநா
என் விசுவாசி இதுவரைக்கும் ஒரு வம்பு பேசினதில்லை.”
என்பார், ஓட்டுநர் “அய்யாவுக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்று
சொல்வார். “தெரியும் திருநா,
அதுதான் சொல்லிக்கிட்டு இருக்கேன். அதேல்லாம்
வேணாம் உனக்காக ஒரு வேலை பார்த்து வைச்சிருக்கேன்.”
என்று கமல்ஹாசன் சொல்வார்.
ஓட்டுநர் அவரை அறியாமல் அழ துவங்க, அப்போது, கமல்ஹாசன்
“என்னுடைய
வீடு, காரு, சொத்து
இதெல்லத்தையும் விட பெரிய சொத்து என்னுடைய டிரைவர் அவரை பத்திரமா
பார்த்துக்கங்கன்னு சொல்லியிருக்கேன்” என்று சொல்வார்.
அதற்கு ஓட்டுநர் “என்னை
உங்களுடைய சொத்துன்னு சொன்னீங்கள்லய்யா அது போதும்யா தாங்கஸுங்கய்யா, தாங்கஸுங்கய்யா” கண்ணீருடன்
சொல்லும் போது, எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் தம்மிடம்
வேலை செய்பவர்கள் மற்ற அனைத்தையும் விட பெரிய சொத்தாக நினைக்க வேண்டும் எண்ணத்தை
மிக ஆழமாக மிக அழுத்தமாக பதிவு செய்ததை பார்த்த கணத்தில் என் கண்கள்
கலங்கியது என்னவோ உண்மை.
திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி.
அத்மார்த்தமான உண்மையை மிக அருமையான தருணத்தில் பதிவு செய்தமைக்கு. இதுவே நான்
மிகவும் ரசித்த காட்சி.
Subscribe to:
Posts (Atom)